வட கொரியா நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணை உலகின் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை என்பதால், வல்லரசு நாடுகள் இடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கடத்த 10- ஆம் தேதி,வடகொரியாவில் கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்புக்கு மத்தியில், உலக நாடுகளில் முன்னிலையாக விழங்கி வரும் ஹவாசாங் – 16 என்ற ஏவுகனையும் அறிமுகப்படுத்தியது.
தற்போது வடகொரிய உருவாக்கப்பட்ட புதிய ஏவுகணையின் மூலம், உலகில் உள்ள எந்த இலக்கை தாக்கி அழிக்கும் திறமை கொண்டுள்ளதாகவும், ஏவுகணை எதிர்ப்புகளை வளையங்களை சுலபமாக தகர்க்கும் ஆற்றல் படைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹவாசாங் – 16 ஏவுகணையானது சுமார் 25 முதல் 26 மீட்டர் நீளம் கொண்டுள்ளதாகவும், 2.5 முதல் 2.9 மீட்டர் விட்டம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது 2017-ஆம் ஆண்டு நவம்பரில் உருவாக்கப்பட்ட ஹ்வாசோங் – 15 ஐசிபிஎம் ஏவுகணையை விட 4.5 மீ நீளமும், 0.5 மீ பெரிய விட்டமும் கொண்ட அமைக்கப்பட்டுள்ளது.
ஐசிபிஎம் புதிய ஏவுகணை உலகின் மிகப்பெரிய மொபைல் ஐசிபிஎம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏவுகணையானது 100 டன் முதல் 150 டன் எடை கொண்டுள்ளது.
இது குறித்து அணு ஆயுத ஆய்வாளர் சூ தியான்ரான் கூறுகையில், இந்த எவுகணை மூலம் அமெக்காவில் உள்ள எந்த மாநிலத்தையும் சில நொடிகளில் தாக்கும் என்றும், இதனால் 25 லட்சம் பேர் சாம்பாலகி மரணமடைவார்கள் என்றும் கூறினார்.இதுமட்டுமின்றி 40 லட்சம் பேர் காயத்துடன் தப்புவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.இது மட்டுமில்லாமல் புகுக்சோங்-12 என்ற நீர்முழ்கி ஏவுகணையும் அறிமுகப்படுத்தயுள்ளது.
இந்த விழாவில் பேசிய வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தேசியத்தின் பாதுகாப்பு காரணமாக மேலும் பல ஏவுகணையை உருவாக்குவோம் என்றும் மக்களின் நம்பிக்கையை காக்க எதையும் செய்வோம் என்றும் கூறியுள்ளனர். தற்போது நிலவிவரும் கடினமான வாழ்வாதாரத்தில் இருந்து வெளியே கொண்டுவர தன்னை அர்ப்பணித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தவித்து வரும் நிலையில் , இத்தகைய ஏவுகணை அவசியமா ? என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.