Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிப்பு!! 11 மாவட்ட கல்வி அலுவலர்க்கான பணிகள்!

New Notification of TNPSC!! 11 Jobs for District Education Officer!

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிப்பு!! 11 மாவட்ட கல்வி அலுவலர்க்கான பணிகள்!

பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி.அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுப்பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகின்ற அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற மாநில அமைப்பானது தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியை செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் காலியிடங்கள் ஏற்படும் போது அதற்க்கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை அதற்குரிய பணிகளில் அமர்த்துவதே இதன் பணியாகும்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறையில் 11 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள  மாவட்ட கல்வி அலுவலர் பணிகளை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு ஒன்றினை டி.என்.பி.எஸ்.சி தற்போது  வெளியிட்டுள்ளது.

எனவே பணியிடங்களுக்கு உரிய தகுதி உள்ளவர்கள் இன்று  14-12-2022  முதல் அடுத்த மாதம் ஜனவரி 13-ந் தேதி (13-01-2023) வரை விண்ணப்பிக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் http://tnpsc.gov.inhttp://tnpscexams.in  இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிப்பர்க்கப்பட்டு இதற்க்கான தேர்வு ஏப்ரல் 9-ந் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version