மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!!

0
162
#image_title

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!!

மாதந்தோறும் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டமான மாதம் 1000 ரூபாய் பெறும் மகளிருக்கு தமிழக அரசு தற்பொழுது முக்கியமான மற்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு மகளிருக்கு உதவும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் பெயரின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் செலுத்தப்படாமல் தமிழக அரசு அறிவித்த சில தகுதிகளின் அடிப்படையில் உள்ள மகளிருக்கு மட்டும் இந்த மகளாக உதவித் தொகை அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பில் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வருமானம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும். நான்கு சக்கர வாகனப்பதிவு, கனரக வாகனங்களின் பதிவு, பத்திரங்களின் பதிவு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் இறப்பு விகிதம் குறித்து விவரங்கள் பதிவு செய்யப்படும். மேலும் பொது விநியோகத் திட்டம் மற்றும் சேவை வரி தரவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வருடமும் அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் தொழில் மற்றும் மின்சார பயன்பாடு குறித்த தகவல்களும் ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் பயனாளிகளின் வருமான வரி குறித்த தகவல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.