பிஎஃப் தொகையை கிளைம் செய்ய ஊழியர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் புதிய வழிமுறையை வெளியிட்டுள்ளது. UMANG ஆப் மூலம் இதனை எளிமையாக பெறுவதற்கு வழிமுறையை வகுத்துள்ளது. இதனால் பிஎஃப் தொகையை எடுக்க அலைய வேண்டியதில்லை. மிகவும் எளிமையான சில கண்டிஷனுங்களுடன் இதனை சுலபமாக க்ளைம் செய்து கொள்ளலாம். ஓய்வூதிய நிதியின் ( Pension Fund) ஒரு பகுதியான EPFO பல வழிமுறைகளையும், செயல்முறைகளையும் மாற்றி புதுப்பித்துள்ளது. இதன் மூலம் EPFO யூசர்ஸுக்கு கிளைம் செய்து கொள்வது மிக எளிமையாக அமையும்.
இனிமேல் உங்கள் பிஎஃப் அமௌண்டை எடுக்க அருகில் உள்ள EPFO மையத்தை அணுகத் தேவையில்லை. அதற்கு முதலில் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரின் வாயிலாக UMANG ஆப்பை லாக் இன் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் குறிப்பிட்டுள்ள EPFO விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும். Employee centric என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும். அதில் தங்களுடைய EPF UAN நம்பரை உள்ளிட்டவுடன் பிஎஃப் கணக்குடன் தொடர்புடைய மொபைல் எண்ணிற்கு OTP வந்திருக்கும். அந்த ஓடிபி சரியாக உள்ளிட்ட பிறகு withdraw முறையை தேர்வு செய்யவும். இப்பொழுது சப்மிட் கிளிக் செய்து கிளைம்ஸ் நம்பரை நோட் செய்து கொள்ளவும்.
பின்னர் குறிப்பிட்ட காலங்களில் உங்களுக்கு பிஎஃப் தொகை வந்து சேரும். சில கன்டிஷன்களும் இதற்கு உண்டு. உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்(UAN) ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் கண்டிப்பான முறையில் மொபைல் எண்ணும் ஆதார் உடன் இணைத்து இருக்க வேண்டும். மேலும் UMANG ஆப்பிலும் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மூன்று கண்டிஷங்களை சரியாக செய்திருந்தால் UMANG ஆப் மூலம் சுலபமாக பிஎஃப் தொகையை கிளைம் செய்து கொள்ளலாம்.