Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரும் புதிய ஆர்டர்.. இவர்களுக்கு மட்டும் தான் ரூ 1000 உரிமைத்தொகை!! உடனே அப்ளை பண்ணுங்க!!

New order coming.. Rs 1000 entitlement only for these!! Apply now!!

New order coming.. Rs 1000 entitlement only for these!! Apply now!!

வரும் புதிய ஆர்டர்.. இவர்களுக்கு மட்டும் தான் ரூ 1000 உரிமைத்தொகை!! உடனே அப்ளை பண்ணுங்க!!

கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டம் : Kalaignar Magalir Urimai Thogai Scheme 2024

திமுகவானது ஆட்சிக்கு வந்து கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (Kalaignar Magalir Urimai Thogai Scheme) கொண்டு வந்தது. இது பெண்களின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. இதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டம் பயன்பெறும் பெண்கள் அரசின் குறிப்பிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே இந்த பணத்தை பெற முடியும். இதிலும் பலர் தகுதி பெற்றும் பணத்தை பெற முடியாமல் உள்ளனர். இது குறித்து அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வந்தனர்.

இதனை நிவர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு மீண்டும் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனிடையே மக்களவைத் தேர்தல் வந்ததால் இதன் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்பொழுது மக்களவை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் ஜூலை மாதம் இதன் பணி ஆரம்பமாகும் என கூறுகின்றனர். அதேபோல விக்கிரவாண்டி தேர்தல் நடைமுறையில் இருப்பதாலும் அந்த தேர்தல் முடிவுகள் வரும் வரை ஒத்தி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் 3 அடிப்படை தகுதி வாய்ந்தவர்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற கூறியுள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியான நபர்கள்:

தமிழக அரசு இந்த திட்டத்திற்காக குறிப்பிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இம்முறை மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்களுக்கு வழங்குவதாக கூறியுள்ளனர்.

மேற்கொண்டு அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும் வளர்வது குறித்து பரிந்துரை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இம்முறை இந்த மூன்று தரவுகளின் கீழ் இருக்கும் பெண்களுக்கு மகளிர்மை தொகை மாதம் 1000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி தேர்தல் நடைமுறையில் உள்ளதால், இதன் விண்ணப்ப படிவம் முடிவுகள் வெளிவந்த பிறகு வழங்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Kalaignar Magalir Urimai Thogai Scheme 2024

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியான பெண்கள் இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக அதன் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று அங்குள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டம் apply online

முதலில் இதற்காக கீழுள்ள அதன் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்லவும்.

https://kmut.tn.gov.in/

இதில் விண்ணப்பதாரர்கள் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட அங்கு கேட்கும் அனைத்து தகவல்களையும் நிரப்பி விண்ணப்பம் செய்யலாம்.

Exit mobile version