Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள்!! நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும்!!

New plans of Digital India from 1st January!! Affects the middle class a lot!!

New plans of Digital India from 1st January!! Affects the middle class a lot!!

2025 ஜனவரி 1 முதல் பல்வேறு வகையான முக்கிய விஷயங்களில் மாறுபாடுகள் ஏற்பட உள்ளது. அதில், யுபிஐ லிமிட் (UPI Limit Rules), டெலிகாம் விதிகள் (Telecom Rules), ஆதார் கார்டு விதிகள் (Aadhaar Card Rule) போன்றவை அடங்கும்.

இதனை தாண்டி நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இன்னும் சில முடிவுகளை எடுத்துள்ளது. அதனைக் குறித்து விரிவாக காண்போம் :-

மத்திய அரசின் இறக்குமதி மேலாண்மை அமைப்பு விதிகள் (Import Management System Rules) வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகளால் முதலில் லேப்டாப் (Laptops), டேப்லெட் (Tablets) மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் (Personal Computers) ஆகியவற்றின் இறக்குமதி லிமிட் குறைக்கப்படவும், கட்டுப்படுத்தப்படவும் முடிவு செய்துள்ளது.

இந்த ஐடி ஹாட்ர்வேட் தயாரிப்புகளால் (IT Hardware Products) மிகப்பெரும் வியாபாரம் நடக்கிறது. பேங்க் சேவைகள் தொடங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகள் வரையில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இல்லாமல் வழங்குவதென்பது இப்போது இயலாத காரியம்.

முதலில், இவை 2025ஆம் ஆண்டுக்கு மேல் மொத்தமாக மாற வாய்ப்புள்ளது. இந்த விதிகள் செப்டம்பர் 30ஆம் தேதியிலேயே வர இருந்தது.ஆனால், லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர் இறக்குமதியாளர்கள் கால அவகாசம் கேட்டதால், ஜனவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புது விதிகள் (New Rules) மூலம் 5 சதவீத லிமிட்டை குறைக்கப் போகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.சீனா, ஹாங் காங், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அதுதொடர்பான ஹாட்வேர் பொருட்கள் அடிமட்ட விலைக்கு வாங்கப்படுகின்றன. அதோடு இந்தியாவிலும் வரிகள் மற்றும் தளர்வுகள் காரணமாக அவை மலிவாக கிடைக்கின்றன. இதை இறக்குமதி மேலாண்மை அமைப்பு விதிகள் மாற்ற அதிக வாய்ப்புள்ளது.

இந்த விதிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் லேப்டாப்புகள் டேப்லெட்டுகள் போன்றவைகளின் விலைகள் அதிகரிக்க கூடும். தற்பொழுது பலரின் வாழ்வில் இவை அன்றாட தேவைகளில் அடங்குவதாக உள்ளது. மத்திய அரசினுடைய இந்த முடிவு பல மக்களை நேரடியாக தாக்குவதாக அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version