Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட புது அதிகாரம்! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

CREDAI அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கம் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது கட்டட அனுமதி பெறுதல் வழியை  எளிமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு, சென்னையை தவிர மற்ற இடங்களில் பத்தாயிரம் சதுரடி கணக்கிலான குடியிருப்பு இடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

அதாவது 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டுமானப் பணிக்கும், 8 குடியிருப்பு யூனிட்களுக்கும், அதேசமயம் 12 மீட்டர் உயரத்திற்கு மிகாமலும் ஸ்டில்ட்டுடன் நான்கு தளங்கள்  அல்லது மூன்று தளங்கள் அதிலும் தரைத்தளம் உள்பட, இவை அனைத்தும் கொண்ட கட்டிடம் வரை உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடம் கட்ட திட்ட அனுமதி வழங்கிக் கொள்ளலாம் என நகர ஊரமைப்பு திட்டத்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதுமட்டுமன்றி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் பொறுப்பு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமோ அல்லது நகர ஊரமைப்பு திட்டத்துறை இடமோ அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, சென்னை தவிர பிற பகுதிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கலாம் என்ற அதிகாரத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version