சூர்யாவிற்கு வந்த புது சிக்கல்! ரூ.5 கோடி நஷ்ட ஈடுடன் 24 மணி நேர கெடு! – வன்னியர் சங்கம்!
நடிகர் சூர்யாவிற்கு தற்போது அவர் தயாரித்து இயக்கிய ஜெய் பீம் படம் தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்க நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெய்பீம். அதிலுள்ள கருத்துக்களை பலர் பாராட்டினாலும் பலர் அதில் சில காட்சிகளை கொண்டு அவரை வசை பாடி வருகின்றனர்.
அதை ஒரு காரணமாக வைத்து அவர்கள் பல வழிகளில் குற்றம் சாட்டி வருகின்றனர். அமேசான் மூலம் வெளியிட்டதால் பல மொழிகளிலும் படம் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் அளவுக்கு பகிரப்பட்டு வருகிறது. அது ஒருபுறம் வெற்றி கண்டாலும் உண்மை கதை என்று கூறியதன் காரணமாக அவர் கதையை மாற்றி விட்டார்.
கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி விட்டார் எனப் பல சர்ச்சைகளும் அவருக்கு எதிராக ஆரம்பித்துள்ளன. வில்லன் நடிகராக வந்தவருக்கு காடு வெட்டி குருவின் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்றும் அவரை காட்டும் காட்சிகளில் அக்னி கலச நாட்காட்டியை வைத்து படம் எடுத்து உள்ளனர் என்றும் நாளுக்கு நாள் சர்ச்சைகள் பெருகி வருகிறது.
இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றிருந்தது போன்றவை தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து பேச்சு பொருளான நிலையில் தற்போது அந்த காட்சிகள் நீக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளனர். அந்த படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும்.
மேலும் ஏழு நாட்களுக்குள் ஐந்து கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் காலக்கெடு 24 மணி நேரம் தான் என்றும் அதனை அவர் மீறும் போது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று மனுதாரர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.