Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காவிரி நீர் கிடைப்பதில் புதிய சிக்கல் :! தண்ணீர் கிடைக்குமா என்ன எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் ??

கர்நாடக மாநிலத்தில் நடப்பாண்டில் அதிக அளவு கரும்பு சாகுபடி செய்துள்ளதால் , தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்டா பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றன.

கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி தண்ணீரை மாதம் வாரியாக கணக்கிட்டு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.34 , ஆகஸ்ட் 46, செப். 36.76, ஆக். 13.8, நவ. 13.8., டிச. 7.4 என கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட வேண்டும்.

ஆனால் காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மாதம் தோறும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை திறப்பதில்லை.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு சாகுபடி அதிகரித்துள்ளதன் காரணமாக தண்ணீர் கிடைக்குமா ? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து டெல்டா பாசன விவசாயிகள் கூறுகையில், தென்மேற்குப் பருவ மழை கர்நாடக மாநிலத்தில் உள்ள கே எஸ் ஆர் ,கபினி , ஹரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் தண்ணீரின் அளவு 255 டி என் சி கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கலாக இருப்பதாக டெல்டா பாசன விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version