Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதிய ரேஷன் அட்டைதாரர்களின் அக்கவுண்ட்-க்கு வரும் பணம்!! அரசு வெளியிடப்போகும் குட் நியூஸ்!!

New ration card holders will receive money in their account!! Good news to be published by the government!!

New ration card holders will receive money in their account!! Good news to be published by the government!!

தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல சிறந்த நடவடிக்கைகளை ரேஷன் கடைகளின் மூலம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம்  நிற்காமல் உழைக்கும் பெண்களுக்கு அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆகும். அது மட்டும் அல்லாமல் பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் மற்றும் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பல பெண்கள் பயனடைந்து உள்ளார்கள் என்றாலும் அந்த திட்டத்தில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்கள் பல நிராகரிக்கப்பட்டன. இதனால் பல பெண்களுக்கு மாதம் ரூ.1000 என்ற உரிமை தொகை கிடைக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க கூடாது, GST செலுத்தும் தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்களாக இருக்க கூடாது, ஓய்வூதியம் மற்றும் அரசின் பென்ஷன் பணம் வாங்குபவர் என பல விதிமுறைகள் இருந்தது.

மேலும் தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தகுதி இருந்தும் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதனால் அரசு, தகுதி உள்ளவர்கள் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்து இருந்தது. இந்த நிலையில் புதியதாக ரேஷன் கார்டு அப்பளை செய்பவர்களுக்கு மகளிர் உரிமை தொகை முதலில் தனது வங்கி கணக்குகளுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த முக்கிய தகவல்கள் அரசிடமிருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version