ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி – “நிடி ஆயோக் ” பரிந்துரை.

0
109

நாடு முழுவதும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கும் வகையில்,”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் முதல் கட்டமாக ஆறு மாநிலங்களில் மட்டும் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த வடிவம் உருவாக்கபட்டுள்ளது, ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவர் , உறுப்பினர்களின் பெயர், முகவரி உட்பட அனைத்து விபரங்களும் சம்மந்தப்பட்ட மாநில மொழி மற்றும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றி புதிய ரேஷன் கார்டுகள் வழங்குமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடைகளில் மீன், முட்டை, ஆட்டிறைச்சி ஆகியவற்றையும் வழங்க “நிடி ஆயோக் ” பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்திய மக்களிடம் சத்துணவு குறைபாடு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது , இதனால் புரதசத்து மிக்க இறைச்சி பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.