இத தெரிஞ்சிக்காம டாஸ்மாக் பக்கம் போயிராதிங்க! டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய விதிமுறைகள்!

0
126
New regulations to come in Tasmac!

டாஸ்மாக்கில் வர போகும் புதிய இணைய விற்பனை முறை. பொதுவாக மதுபானங்கள் வாங்குவது என்றால் டாஸ்மார்க்கில் நேரடியாக அம் மதுபானங்களுக்கான பணத்தை செலுத்தி வாங்குவார்கள், இந்த விற்பனை முறையில் நிறைய குளறுபடிகளும், மது பானத்தின் விலையை விட 10ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள் என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக மது பிரியர்களால் டாஸ்மார்க் நிர்வாகம் மீது சொல்லப்பட்டு வருகிறது.

அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தீபாவளிக்கு பிறகு இணைய வழி கியூ ஆர் கோர்டு (QR CORD ) ஸ்கேனர் முறையில் மது பானங்கள் விற்பனை செய்யப்படும் என்ற தகவல் டாஸ்மாக் தரப்பில் வெளியாகியுள்ளது. இனி பாட்டிலுக்கு மேல் 10ரூபாய் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற செய்தி குடிமகன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அங்கன் வாடிகளில் பொருட்கள் கியூ ஆர் கோர்டு (QR CORD) ஸ்கேனர் விற்பனை முறை  நடைமுறையில் இருப்பது போல டாஸ்மாக்கிலும் கியூ ஆர் கோர்டு               (QR CORD) ஸ்கேனர் முறையில் விற்பனை செய்ய என்றும் , அதற்கான சோதனை முயற்சியாக ராமநாதபுர மாவட்டம் மற்றும் அரக்கோண பகுதிகளில் உள்ள டாஸ்மாக்கில் கியூ ஆர் கோர்டு (QR CORD)  ஸ்கேனர் முறை விற்பனையை செயல்படுத்தி வருகிறது.

தீபாவளிக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் கியூ ஆர் கோர்டு        (QR CORD) ஸ்கேனர் முறை அமல்படுத்தப்படும். மேலும் இந்த ஸ்கேனர் முறை ஸ்மார்ட் போன்  ஸ்கேனர் முறையில் நடைபெறும், என்பதால் ஸ்மார்ட் போன்  இல்லாதவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.