Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது.
அதில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பின்னர் மத்திய தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ்மொழி மொழிக்கு அனுமதியளித்த மத்திய அரசு தொல்லியல் துறை புதிய அறிக்கையை வெளியிட்டது.

மத்திய அரசு தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி, மத்திய தொல்லியல் துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் .மேலும், தமிழ் ,மலையாளம் ,கன்னடம் ,ஒடிசா, உள்ளிட்ட 10 மொழிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும் சர்ச்சைக்குரிய தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version