தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள்! வெளியான அதிரடி அறிவிப்பு!
கொரோனா தாக்குதலின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதில் ஒன்றாக ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது.
பகுதி நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு போன்றவை செயல்படுத்தி வருகிறது.ஆனாலும் கொரோனா நோய் தாக்குதலின் அளவு என்னவோ குறைந்தபாடில்லை.மக்களின் தேவைக்காக அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை மட்டும் அனுமதித்தாலும் மக்கள் என்னவோ பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அதனால் தமிழக அரசு இன்று முதல் ஊரடங்கை இன்னும் பலத்த கட்டுப்பாடுகளுடன் செயல் படுத்த போவதாக அறிவித்துள்ளது.முதலில் 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டது.
அதன்பின் 10 ந்தேதி முதல் 25 ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து இருந்தது.ஆனாலும் மக்களின் தேவைக்காக பேருந்துகள் ஓடாது எனவும், அலுவலகங்கள் செயல்படாது எனவும், மற்ற அத்தியாவசிய கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்ட மன்ற கட்சி தலைவர்கள் கூட்டத் தொடர் நடைபெற்றது.அதில் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த தீர்மானத்தில் சனிக்கிழமையான இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதாகவும், சமீப காலங்களில் இந்திய அளவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சம் வரை பரவி வருகிறது.
இதன் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு, இட வசதியின்மை, என்ற பல காரணங்களால் மக்கள் பலர் இறக்கும் தருவாயில், மயானத்திலும் இடம் இல்லாத அவல நிலை தொடர்கிறது.அதுவும் குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, கேரளா, உத்தர பிரதேசம், டெல்லி மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பிப்ரவரி கடைசியில் 450 பேர் என்று ஆரம்பித்து தற்போது 30000 பேர் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது.தமிழகத்தில் மட்டும் கடந்த 13ன் தேதி நடந்த கணக்கெடுப்பின் படி 1.83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தனி மளிகை கடை, பலசரக்கு, காய்கறி, மீன், இறைச்சி கடைகள், கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும்.
50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
ஏ.டி,எம். மற்றும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல் படும்.
காய்கறி, பூ, பழம் போன்ற நடைபாதை கடைகள் அனைத்தும் செயல் பட அனுமதி இல்லை.
டீ கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்.
17 ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளும், வெளியிலும் செல்ல ஈ-பாஸ் முறை அமல்படுத்தப்படும்.
மேலும் பொது மக்கள் தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்றும், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கனிவுடன் கேட்டு கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.