இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

0
151

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது.

ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. அதன் படி, இன்று முதல் கோவையில் பால், மருந்து, காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து உணவங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டு இயங்கும் எனவும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.