இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்!
மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்று வரும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திட்டத்தின்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில் இருக்கையில் அமர்ந்து தூங்குதல், பணி நேரத்தில் தொலைபேசி பயன்படுத்துதல் மற்றும் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது, படம் பார்ப்பது, வலைதளங்களில் வீடியோக்கள் பார்ப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஊழியர்கள் ஈடுபடக் கூடாது.
மீறினால் அவர்களுடைய பணி ஓய்வு கொடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 50 வயதிற்கு மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களை தனியாக கவனிக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு வகையான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. மேலும் மத்திய அரசின் இந்த புதிய சட்ட திட்டங்கள் நாடாளுமன்ற ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களை பணிபுரிந்தால் நாம் விரும்பிய நேரத்திற்கு அலுவலத்திலிருந்து செல்லலாம் என்ற எண்ணம் அனைவரிடம் இருந்தும் நீங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.