வருகின்ற 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெலிகாம் நிறுவனம் ஒரு மாபெரும் மாற்றத்தை சந்திக்க உள்ளது.ஜனவரி ஒன்றாம் தேதி அமலாகும் புதிய விதியால் ஜியோ,ஏர்டெல்,பிஎஸ்என்எல்,வோடாபோன் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் தொடைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வளர்ச்சி பாதிப்பை சந்திக்கும்.
ஜனவரி 01 முதல் ரைட் ஆஃப் வே அனுமதி விதி நடைமுறைக்கு அமலாக இருக்கிறது.இந்த விதியை நாட்டில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று TRAI அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரைட் ஆஃப் வே(RoW) விதி அமல்படுத்தபட உள்ளது.இது நாடு முழுவதும் 5G தொழில்நுட்பத்தை வேகமாக வெளியிடுவதற்கு உதவியாக இருக்குமென்று சொல்லப்படுகிறது.
ரைட் ஆஃப் வே
பொது மற்றும் தனியார் இடத்தில் மொபைல் டவர்கள்,பிற தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தரங்களை கட்டாயப்படுத்தும் வழிமுறைகளின் தொகுப்பு ரைட் ஆஃப் வே ஆகும்.
இது பொது பாதுகாப்பு,வெளிப்படைத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்க கூடியதாக இருப்பதால் பொது மற்றும் தனியார் சொத்து உரிமையாளர்கள்,தொலைத்தொடர்பு வழங்குநர்கள் ரைட் ஆஃப் வே விதியை அவசியம் பின்பற்ற வேண்டும்.
இது வெளிப்படைத்தன்மை,உட்கட்டமைப்பின் திறமை,மின்னணு பதிவுகளை பராமரித்தல் போன்றவற்றை உறுதி செய்கிறது.இந்த RoW விதியால் அனுமதி பெறுவதன் செயல்முறை எளிதாகிறது.அமலாக உள்ள RoW விதிகள் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் வளர்ச்சியும் பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.