இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது சிம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்கள் அனைவருக்கும் நாளை ( டிசம்பர் 11 ) முதல் டிராய் மூலம் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது.
புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் ஜியோ ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் குறுஞ்செய்திகள் :-
✓ பேங்க் ஆப்களில் பணப்பரிவர்த்தனைகள் செய்ய மெசேஜ் மூலம் ஓடிபி (OTP) நம்பர் அனுப்பப்படுகிறது
✓ சோஷியல் மீடியா மற்றும் ஓடிடி ஆப்களிலும் மெசேஜ் மூலம் ஓடிபி வெரிபிகேஷன் செய்யப்படுகிறது.
✓ கடன் கொடுக்கும் ஆப்களும் ஓடிபி அனுப்பியே வெரிபிகேஷன் செய்கிறது.
இவை அனைத்தும் வணிக ரீதியான தகவல்களை அனுப்புவதால் இந்த விதியின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்பும் முதன்மை நிறுவனம் (Principal Entity) மற்றும் டெலிமார்கெட்டர் (Telemarketer) செயின்களின் விவரங்கள் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்களிடம் பதிவு செய்யப்பட்ட வேண்டி இருக்கிறது. இதற்காக டிராய் நவம்பர் 1 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்த நிலையில், வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்பும் நிறுவனங்கள் கால அவகாசம் கேட்டதால், அந்த விதிகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல் செய்ய திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மீண்டும் மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் டிசம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டன. இதன் மூலம் வணிக ரீதியான மெசேஜ்களை அனுப்பும் முதன்மை நிறுவனங்கள் மற்றும் டெலிமார்கெட்டர் நிறுவனங்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டன. இந்த அவகாசம் நாளையுடன் முடிகிறது. ஆகவே, டிசம்பர் 11ஆம் தேதி முதல் மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் அமலாகின்றன.
டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதன்மை நிறுவனங்கள் டிரேசபிலிட்டி விவரங்களை பதிவு செய்துவிட்டன. ஆகவே, இந்த முறை விதிகள் கட்டாயம் அமலாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.