மாடு வளர்ப்பவர்களுக்கு போட்ட புதிய ரூல்ஸ்.. 3 லட்சம் வரை அபராதம்!! சென்னை மாநகராட்சி காட்டிய அதிரடி!!
சென்னை மாநகராட்சியானது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் என தொடங்கி கால்நடை உள்ளிட்ட அனைத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்று விதியை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னையில் பல வீடுகளில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் போதிய இடம் இல்லாததால் அப்படியே சாலைகளில் திரிந்து வருகின்றது.
இதனால் மாடானது பொதுமக்களை முட்டுவது போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சனைகள் உண்டாகிறது. குறிப்பாக மாடுகள் குழந்தைகளை தாக்கும் வீடியோவானது சமீபத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனை எல்லாம் தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி ஆனது இது குறித்து புதிய நிபந்தனைகளை வரையறுத்தது.
அந்த வகையில் சாலைகளில் திரியும் மாடுகளை ஒவ்வொரு மண்டலங்களிலும் நிர்வாகிகளை அமர்த்தி பிடித்து வந்தனர். அதேபோல போதிய இட வசதி இருந்தால் மட்டுமே மாடுகளை வளர்க்க வேண்டும் என்ற விதிமுறையும் அமல்படுத்தியுள்ளனர். போதிய இடவசதி இல்லாமல் சாலைகளில் தெரியவேண்டும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் பிராணிகள் வகை தடுப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
தற்பொழுது வரை 50க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர்.ஒவ்வொரு தனி நபருக்கும் 1550 என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதே போல மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் தொழுவத்திற்கு உரிமம் பெற வேண்டுமென்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.இந்த உரிமம் மூலம் மாடுகளுக்கு ஏற்ப இடமுள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.