Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் குழந்தைகள் தொடர்பான புதிய விதிமுறைகள்!! அமைச்சர் அறிவிப்பு!!

New rules regarding children with effect from January 1!! Minister's Announcement!!

New rules regarding children with effect from January 1!! Minister's Announcement!!

ஜனவரி 1 2025 முதல் விளம்பரங்களில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ( யுனெஸ்கோ ) குழந்தைப் பருவத்தை 0-8 வயது வரை வரையறுக்கிறது . விளம்பரச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஒரு குழந்தையின் வரையறை ஒரு அதிகார வரம்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். இருப்பினும், 12 வயது என்பது பொதுவாக வெட்டுப் புள்ளியாகப் பயன்படுத்தப்படுகிறது. 12 வயதிற்குள் குழந்தைகள் நுகர்வோராக தங்கள் நடத்தையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

விளம்பரங்களை திறம்பட அங்கீகரிக்க முடியும் மற்றும் அதை நோக்கி விமர்சன அணுகுமுறைகளை மேற்கொள்ள முடியும் என்ற பரவலான கல்விக் கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டு இந்த கட்-ஆஃப் புள்ளி செய்யப்படுகிறது.

இது குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதற்கான வர்த்தமானி அறிவிப்பை நடைமுறைபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளம்பரங்களில் நடிப்பது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :-

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1 ஆம் திகதி முதல் விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்துவோம்.அதற்கான வர்த்தமானியை நடைமுறை படுத்த அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில், கடந்த அரசாங்கங்கள் மூலம் இது 7-8 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், இதனை நாங்கள் ஒத்திவைக்க மாட்டோம், ஜனவரி 1 முதல் நடைமுறைபடுத்துவோம் என தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version