குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!!

0
159

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு புதிய முறையை அறிவித்த அரசு!!

அரசு ஊழியர்களின் அனைவருடைய வருங்கால வைப்பு நிதி இருப்பைத் தெரிந்து கொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை குறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ‘இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி’ முறையை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சேவையை 044-24325050 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமாக பயன்படுத்த இயலும்.

மேலும் இந்த சேவையினை தமிழக அரசு பணியில் சார்ந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேமநல நிதி ஆசிரியர், சேமநலநிதி சந்தாதாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி நடப்பு இருப்பு மற்றும் நடப்பு ஆண்டில் பெற்ற கடன் கணக்கில் உள்ள தொகை பெறுவதற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

மேலும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், ஓய்வூதியம் பெற தகுதி உடைய மேற்குறிப்பிட்ட அதிகாரிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் ஓய்வூதிய விண்ணப்ப நிலையை அறிய இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறும் மற்ற அரசு ஊழியர்கள் மற்றும் சிறப்பு பிரிவு ஓய்வூதியதாரர்கள், அரசு கலைஞர்களைத் தவிர வேறு நபர்கள், கலைஞர் ஓய்வூதியம் தமிழறிஞர்கள் ஓய்வூதியம், நலிந்த விளையாட்டு போன்றவை பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிலை அறிய இந்த வசதியை பயன்படுத்தலாம். மேலும் அதனை தொடர்ந்து சுய வரைதல் அதிகாரிகள் தங்களது ஊதிய சீட்டின் பதிவு குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டு இருக்கின்றது.