ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்!

0
131

ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்!

தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் கைரேகை மூலம் குடும்ப நபர்களை உறுதி செய்து பொருட்களை வழங்கும் பயோ மெட்ரிக் முறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் செய்யக்கூடிய அம்சங்களை குறித்து பணியாளர்களுக்கும்,பொது மக்களுக்கும் சில அறிவுறுத்தல்களை உணவுத்துறை வழங்கியுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் செய்யக்கூடாதவை!

1.கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தையும்,விற்பனை விவரங்களை காட்டும் இயந்திரத்தையும், அதிகம் தூசி படும் இடத்திலோ அல்லது சூரிய ஒளி படும் இடத்திலோ வைக்க கூடாது.

2. இந்த இயந்திரங்களை பொதுவிநியோகத் திட்ட முறையை தவிர்த்து மற்ற எந்த பயன்பாட்டிற்கும் இதனை பயன்படுத்த கூடாது.

3. ரேஷன் கடை ஊழியர்களின்,பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை வேறுயாருக்கும் பகிரக்கூடாது.

4.ரேஷன் கடை ஊழியர்களும் அல்லது பொது மக்களும் இயந்திரத்தை சேதப்படுத்தினால் அதற்குரிய தொகையை அவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும்.

5.இயந்திரத்தில் எண்ணெய் தண்ணீர் போன்ற திரவங்கள் கொட்டிவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

6.விற்பனை விவரங்களை காட்டும் இயந்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ள
மின்னேற்றியை (சார்ஜரை) பயன்படுத்தி மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.

7. பொருட்களை விநியோகிக்க ஆரம்பிக்கும் பொழுது இணைய இணைப்பு சரியாக உள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

8. இயந்திரத்தை பயன்படுத்தப்படாத நிலையில் அதனை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

பொதுமக்கள் செய்யக்கூடாதவை!

ஈரக் கையால் கைரேகையை வைத்து கூடாது.

கைரேகை வைக்கும் பொதுமக்கள்,கைரேகை வைக்கும் திரையில் உள்ள பட்டனை கடுமையாக அழுத்தக் கூடாது.

இந்த பயோமெட்ரிக் இயந்திரம் இயங்கும் முறை!

1.விற்பனை விவரங்களை காட்டும் இயந்திரத்தின் முகப்பு பக்கத்தில் விற்பனை என்னும் பட்டன் இருக்கும் அதனை அழுத்தும் பொழுது அதில் பயோமெட்ரிக் முறையை தேர்வு செய்யச் சொல்லும்.

2.பின்பு ரேஷன் அட்டையில் உள்ள பார் கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டும்.பார் கோடுகள் ஸ்கேன் செய்த பிறகு அடையாள அட்டையில் உள்ள நபர்களின் விவரம் கணினி திரையில் காட்டும்.

3. இந்த விவரத்தில் பயனாளரின் ஒவ்வொருவரின் ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களும் மற்றும் குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியையும் தெளிவாக காட்டும்.

4.இது மட்டுமின்றி பொருள் வாங்க வந்த குடும்ப உறுப்பினரின் ஆதார் எண்ணை சரிபார்த்து ஒப்புதல் வழங்கிய பின்பு,அவர்கள் கைரேகை வைக்க வேண்டும். அவர்கள் வைக்கும் கைரேகை ஆதார் கார்டில் உள்ள கைரேகையோடு சரியாக உள்ளனவா என்று கணினியே சரிபார்க்கும்.

5.எல்லாம் தகவல்களும் சரியாக இருப்பின் எப்பொழுதும் போன்றும் நியாய விலை பொருட்கள் வழங்கப்படும்.

ரேஷன் கடைக்கு செல்லும் பொழுது மக்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டியவை!

ஒருவேளை இந்த கைவிரல் ரேகை பயன்பாடு தோல்வி அடைந்துவிட்டால்,நீங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அந்த குறுஞ்செய்தியில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டிருக்கும்.

அதனை ரேஷன் கடை ஊழியரிடம் காண்பித்து,ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

எனவே கைரேகை முறை பயன்படுத்தப்பட முடியாத நேரத்தில்,பொருட்களை எளிதில் வாங்குவதற்கு,
நியாயவிலை கடைக்குச் செல்லும் மக்கள் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள,
போன் நம்பரை உடைய செல்லிடப்பேசியை எடுத்துச்செல்ல உணவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஏனெனில் இணைய
பிரச்சனையாளோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ கைரேகை முறை பயன்படுத்தப்பட முடியாமல் போகும் சூழலில் மக்களுக்கு ஏற்படும் அலைச்சலைத் தவிர்க்க,ரேஷன் பொருட்கள் வாங்கச் செல்லும் மக்களை செல்போன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பயோமெட்ரிக் சிஸ்டத்தை கடைபிடிப்பது கடினமானது போன்று தெரிந்தாலும் இந்த சிஸ்டத்தின் மூலம் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய நியாய விலை பொருட்கள், ஏமாற்றப்படாமல் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.