Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் டிவியில் வரும் புதிய சீரியல்! ஹீரோயினாக சன் டிவி கதாநாயகி!

ஒவ்வொரு டிவியிலும் நடித்தவர்கள் , வேறு டிவி சேனலில் அல்லது சீரியல்களில் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படியே விஜய் டிவியில் இருந்த தீபக் சில ஆண்டுகளாக வேறு ஒரு சேனலில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்பொழுது மறுபடியும் விஜய் டிவிக்கு வந்துள்ளார்.

நாளுக்கு நாள் சீரியல்களின் மோகம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. டிவி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது கதைகளை உருவாக்கி சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி நாள் இரவு 11 மணிவரை சீரியல்கள் வரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இன்னிலையில் சீரியல்களை சினிமா படம் போலவே எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்லலாம். பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் முயற்சியில் பல்வேறு செயல்கள் முயற்சி செய்து வருகிறது. அப்படி முன்னணி ஹீரோயின்கள் கூட சீரியலுக்கு வந்து விடுகிறார்கள். வாய்ப்பே கிடைக்காத பல நடிகர் நடிகைகள் சீரியல்களில் களமிறங்கி வருகிறார்கள். அதேபோல் சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் போனவர்களும் கூட உள்ளனர்.

இந்நிலையில் புகழ்பெற்ற விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்று ஆரம்பமாக உள்ளது. அதில் பிரபல நடிகை நட்சத்திரா நடிக்க உள்ளார். இவர் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போன்று பல படங்களிலும் நடித்துள்ளார்.

இதில் தீபக் தான் ஹீரோ. இவர்களுடன் தெய்வமகள் சீரியல் புகழ் ரேகாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று தெரியவருகிறது. இன்று காலை விஜய் டிவியில் இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது. அதற்கு தமிழும் சரஸ்வதியும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலுக்கு வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளது.

Exit mobile version