கடலோர காவல் படையில் புது கப்பல் இணைக்கப்பட்டது!

0
139

எல் அண்ட் டி நிறுவனம் இந்த கப்பலை தயாரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியில் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல், முழுமையான உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

இந்த கப்பலின் பெயர் சி-452 ஆகும். இந்த கப்பல் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்தினகிரி என்ற இடத்தில் நிகழ் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கப்பல் படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் என்ற பதவியில் இருக்கும் ராஜன் பர்கோட்ரா அவர்கள், இந்த சி-452 என்ற கப்பலை, இந்திய கடலோர காவல் படையில் நேற்று இணைத்து வைத்துள்ளார். 

மேலும் இந்த கப்பல் இந்திய கடலோர காவல் படையில் முறையாக இணைத்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காணொளி காட்சி மூலம் ராஜன் பர்கோட்ரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி இந்தக் கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, அத்தியாவசியமான கருவிகளையும் அதற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளையும் இந்த கப்பல் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல் 26 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது ஆகும்.