12 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட் போன்!!! இந்தியாவில் அறிமுகம் செய்த மோட்டோ நிறுவனம்!!! இதன் விலை இவ்வளவு ரூபாயா!!?

0
123

12 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட் போன்!!! இந்தியாவில் அறிமுகம் செய்த மோட்டோ நிறுவனம்!!! இதன் விலை இவ்வளவு ரூபாயா!!?

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோளா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 12ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 12 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட் போனுக்கு மோட்டோ ஜி84 5ஜி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போனின் விலை, மற்ற அம்சங்கள் பற்றி இனி பார்க்கலாம்.

இந்த புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் புல் ஹெச் டி +, 120 ஹெச் ஜெட் பிஒ.எல்.இ.டி திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 695 புராஸசரும் ஆண்ட்ராய்ட் 13 ஓ.எஸ் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 14 அப்டேட் மற்றும் மூன்று செக்யூரிட்டி அப்டேட் செய்து கொள்ளும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 256 ஜிபி ரோம் மெமரி கொண்டுள்ளது. மேலும் யு.எஃப்.எஸ் 2.2 ஸ்டோரேஜ் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. மேலும் 5000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 30 வாட் டெர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுப்பதற்கு 50 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி எடுக்க 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அல்ட்ரா வைடு கேமாராவானது டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ ஆப்ரேஷன் ஆகிய ஆப்சன்களை வழங்குகின்றது.

புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இன்பிள்ட் டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் டூயல் 4ஜி வோல்ட், டூயல் சிம் சிலாட், புளூடுத், வைபை, 3.5எம்.எம் ஆடியோ ஜேக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸ், டூயல் மைக்ரோபோன் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜேபி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம் கொண்ட ஒற்றை வேரியன்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் விலை 19999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் செப்டம்பர் 8ம் தேதி தொடங்குகின்றது. மேலும் பயணர்களுக்கு சிறப்பு சலுகையாக ஐ.சி.ஐ.சி.ஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயணர்களுக்கு 1000 ருபாய் சிறப்பு தள்ளுபடியும் எக்ஸ்சேன்ஜ் சலுகையாக 1000 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.