Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

1940- பின் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்மரம் !!

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தாலுக்கா பெரியம்மாபாளையம் ஊராட்சியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2 மீட்டர் நீளமுடைய கல்மரத்தை கண்டு ,அவ்வூர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா தாலுகாவில் பெரியம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காம்பியம் கிராமத்தில் ,இரண்டு மீட்டர் நீளமுடைய புதிய கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லானது ஊருக்கு வடக்கே உள்ள பொன்னேரி தண்ணீர் கொண்டுவரும் ஒரு ஓடையில் புதைக்கப்பட்டிருந்த கல்மரம் தற்போது வெளிப்பட்டுள்ளது . இரண்டு மீட்டர் நீளமுடைய இந்த கல்மரமானது சுண்ணாம்பு பாறை ஒன்றில் புதைந்திருந்து தற்போது அதன் மேற்பகுதி மட்டும் வெளிப்பட்டுள்ளது.

இதன் நுனிப்பகுதியனாது அகலமாக காணப்படுவதாகவும், கிளைகளுடன் கூடிய மரமாக இருப்பதாகவும் ஊர் மக்கள் கூறியுள்ளனர். மேலும் ஓடையில் சிறு சிறு கிளைகள் போன்ற அமைப்புடைய மரத்துண்டுகள் கிடைத்துள்ளது. கிளைகளுடன் கூடிய பகுதியாக இருந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். முன்பு மரக் கல்லானது 1940-ஆம் ஆண்டு ஆலந்தூர் தாலுகாவில் எம் எஸ் கிருஷ்ணா என்ற புவியியல் ஆய்வாளர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின்னர் மரத்துண்டுகள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டது. சாத்தனூர் கிராமத்தில் ஏரிக்கு வடக்கே தண்ணீர் வரும் ஓடையில், அந்த கல் மரம் காணப்பட்டது. கல்மரம் சாத்தனூர் கல்மரம் போன்று நிரிடேசியஸ் கலந்த மரமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆலந்தூர் தாலுகாவில் மட்டும் காண கிடைக்கப்பெற்ற கல் மரத்துண்டுகள் தற்போது முதன்முறையாக ஓடும் ஓடையில் 2 மீட்டர் நீளத்தில் கண்டறியப்பட்டுள்ளது ஊர் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கல்மரமானது பாதுகாத்து வருகின்ற தலைமுறைக்கு இவ்வூர் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்பதற்கான சான்றாக பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்தனர் .நேற்று இந்த புதிய கல் மரத்தை ஊர் பொதுமக்கள் தர்மகத்தா சோலை பெரியசாமி தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து கல் மரத்தை சீர் படுத்தியுள்ளனர்.

இதனை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா சென்று பார்வையிட்டு கல்மரத்தை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.

Exit mobile version