Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 

நரைமுடியை தடுக்க புதிய ஆய்வு

நரைமுடியை தடுக்க புதிய ஆய்வு

இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 

மனிதர்களுக்கு நரைமுடி எவ்வாறு ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி ஆகும். அதனால்தான் தலைமுடிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அந்த தலைமுடி உதிர்ந்தாலோ, நரை ஏற்பட்டாலோ மிகுந்த கவலை கொள்கிறோம். தலைமுடி நரைப்பது இயல்பான விசயம்தான். இதற்கு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், நமது மரபியல் போன்றவை காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

ஆனால் தற்போது நியுயார்க் பல்கலைகழகம் எலிகளை வைத்து ஆராய்ந்து நரைமுடி உண்டாவதர்க்கான காரணங்கள் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தலைமுடிக்கு இடையில் உள்ள இறந்த செல்கள்,  அங்கேயே தங்கி இருப்பதுதான் நரைமுடிக்கு காரணம். மயிர்க்கால்களில் இருந்து புதிய முடி வளர்கிறது. அங்கு நிறமியை உருவாக்கும் மெலனோசைட்டுகள் சிதைந்து மீண்டும் உருவாகும். புதிய  மெலனோசைட்டுகள் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாகும். இது நுண்ணறைகளுக்கு நடுவே அடிக்கடி நகர்ந்து ஊடுருவும் காரணமாகத்தான் முடிக்கு கருப்பு நிறத்தினை கொடுக்கிறது. நமக்கு வயதாகும் போது இந்த ஸ்டெம் செல்கள் நகரும் திறனை இழந்து அங்கேயே தங்கி விடுவதால்  நரைமுடி ஏற்படுகிறது.

இந்த ஆய்வு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதை வைத்து தலைமுடியை மீண்டும் கருமையாக்கவும், நரைக்காமல் இருக்கவும் வழிகளை கண்டுபிடிக்கலாம் என கூறியுள்ளனர்.

 

Exit mobile version