வாகன ஓட்டுநர்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்ப்பதற்காகவும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட திட்டம் தான் பாஸ்ட்டேக். இந்த திட்டத்தின் மூலம் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நேரம் ஆனது சேமிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தன்னுடைய சுற்றுலாக் கையில் சில முக்கிய விதிமுறைகளை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
NCPI சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
பிப்ரவரி 17ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டுனர்களின் உடைய பாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்தை பொறுத்து சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுங்கச்சாவடிகளுக்கு வாகனங்கள் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஃபாஸ்ட் டேக் ஒயிட் லிஸ்டில் உள்ளதா அல்லது பிளாக் லிஸ்டில் உள்ளதா என்பதை கண்டறிந்து விடும் என்றும் பிளாக் லிஸ்டில் இருந்தால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இரண்டு மடங்காக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு செயல்படாமல் இருந்தால் அல்லது பிளாக் லிஸ்டில் இருந்தால் ஃபாஸ்ட் டேக் கட்டணத்திற்கு இரண்டு மடங்கு அதிகமாக அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நிராகரிக்கப்படும் பரிவர்த்தனைக்கு ” எரர் கோட் 176 ” படிதான் இந்த அபராதமானது விதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.