Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்! நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைது செய்யப்படுவாரா?

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராவார். இவரின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைவசம் சில திரைப்படங்கள் வைத்துள்ளார். மேலும் இவர் வெப்சீரீஸ்க்கு நடிக்க போகலாம் என்று யோசித்து வருகிறாராம். அதற்க்குள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டி வரும் போல தெரிகிறது ஏனெனில் சிபிஐயின் பார்வை தற்போது ராகுல் ப்ரீத்தி சிங் மீது விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, இந்திய திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இவர் தற்கொலைக்கு முக்கியக் காரணம் இவரின் காதலி ரியா எனும் கருத்து எழுந்துள்ளது. ஏனெனில் இவர் காதலி ரியா, சுஷாந்திற்கு அடிக்கடி போதை பொருட்களை கொடுத்து உள்ளார். அதனால் தான் தற்கொலை மேற்கொண்டுள்ளார் எனும் சந்தேகம் சிபிஐக்கு எழுந்துள்ளது.

சுஷாந்திற்க்கும், காதலி  ரியாவிற்கும், நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தோழியாவார்.  அதனால் இச்சம்பவத்திற்கும்  ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா என்று சிபிஐ விசாரித்து வருகிறது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இதனால் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து கோலிவுட் வாசிகள் பல கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

Exit mobile version