Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

Shock news of Thalapathy 67! Is the director responsible for this?

Shock news of Thalapathy 67! Is the director responsible for this?

தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

விஜய் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூல் சாதனை படைத்தது மாஸ்டர் வெற்றிக்கு பின் விஜய் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைவாரா  என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.

மேலும் விஜய் நடிப்பில் பீஸ்ட் படமானது வெளியானது. அதனைத் தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கிததில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு விஜயின் பிறந்தநாளையொட்டி வாரிசு என பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தின் நான்காம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது.இந்த ஷுட்டிங் ஒரு வாரம் வரை நடைபெற உள்ளதாம். இதற்காக தான் விஜய் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். நான்காம் கட்ட ஷுட்டிங்கில் குடும்பசென்டிமென்ட் சீன்கள் படமாக்கப்பட உள்ளதாம் என கூறப்படுகிறது.

மேலும் வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள் . வாரிசு படத்துடன் 3 பெரிய படங்கள் பொங்கல் ரேசில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது வெளிவந்த தகவலில் படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67 படமானது தயாராக உள்ளது. அதில்  கதாநாயக சமந்தா கமிட் ஆகியுள்ளார் என்றும் சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் விஜயின் 67 படத்திற்கும் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் 67 படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக கமிட் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version