Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஜித் நடிக்கும் புதிய படத்தின் புதிய அப்டேட்!

அஜித் நடிக்கும் புதிய படத்தின் புதிய அப்டேட்!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதையடுத்து கடந்த மாத இறுதியில் வலிமை படத்தின் டிரைலர் வெளியானது. வலிமை படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக இருந்தது.

ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில், கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தமிழகத்திலும் தொற்றின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மேலும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் படத்தை வெளியிட்டால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கருதி வலிமை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் – எச்.வினோத் – போனி கபூர் மூன்றாவது முறையாக புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version