Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகளிர் உரிமை தொகையின் புதிய அப்டேட்!! தமிழக அரசு அறிவிப்பு!!

New Update of Women's Entitlement Amount!! Tamil Nadu Government Notification!!

New Update of Women's Entitlement Amount!! Tamil Nadu Government Notification!!

மகளிர் உரிமை தொகை பெறுவதில் ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை வரக்கூடியவர்கள் வேறு எந்த உதவி தொகையையும் பெறக் கூடாது எனக் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் சில புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கலைஞர் உரிமைத் தொகையை பெற புதிய அறிவிப்பின் கீழ் தகுதியுடையவர்கள் :-

✓ மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மரபு நோய் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் உதவித் தொகை பெறுபவர்களாக இருந்தாலும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள்.

✓ பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

✓ இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.

✓ வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், அவர்களும் தகுதியுடைய அவர்களே.

இதுபோன்று காரணங்களுக்காக மறுக்கப்பட்ட மகளிர் உரிமை தொகையை பெற அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டால், அவர்களின் சிறப்பு அனுமதியின்பேரில் உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு.

Exit mobile version