லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

0
234
New Update on Lady Superstar! Fans excited!

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்.மற்ற நடிகைகளுக்கும் தனி நாயகியாக நடிக்க முன் உதாரணமாக இருந்தவர் திருமணமாகிய பின்னாலும் நம்பர் 1 இடத்தில இருப்பவர்.

நயன் முதன் முதலில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தனி கதாநாயகியாக நடித்த படம் தான் மாயா. அடுத்து என்ன நிகழும் என்று நினைக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸ் நிறைந்த படமாக அமைந்து நயன்தாராவுக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் கனெக்ட் இந்த படத்தின் ட்ரேய்லர் வெளியாகி அனைவரையும் மிரள செய்தது.

ஹாலிவுட் தரத்துக்கு இடைவேளை இல்லாமல் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது இந்த படம். நயன்தாராவின் இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.டிக்கெட் விலையை தாண்டி அதிகம் சம்பாதிப்பது இடைவெளியில் தான். இப்படி இடைவெளி இல்லாமல் ஓடினால் எப்படி சம்பாதிப்பது. கண்டிப்பாக இடைவெளியுடன் தான் ஓட வேண்டும்.

இல்லையெனில் படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கறாராக சொல்லிவிட்ட நிலையில் சரி என்று இறங்கி வந்து 59 வது நிமிடத்தில் இடைவெளி வருமாறு செய்து இருக்கிறார்.திருமணம், கணவர், குழந்தைகளுக்கு பின் இந்த படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார். திருமணத்திற்கு பின் முதலில் வெளிவரும் படம் இது. இதனை கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தயாரித்து இருக்கிறார். படத்தில் நயன்தாராவுடன் வினைய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கீர் ஆகியோர் நடித்துள்ளனர்.கொரோனா காலத்தில் ஒரு வீட்டினுள் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக கொண்டது இந்த படம்.