டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்!

0
231
#image_title

டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்!

பிரபல சமூக பயன்பாட்டு நிறுவனமான டுவிட்டர் நிறுவனம் அதன் செயலியிலும் இணையதளத்திலும் போலிச் செய்திகளை கண்டறிய ‘நோட்ஸ் ஆன் மீடியா’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிக மக்களால் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு போன்ற செயல்களுக்காக டுவிட்டர் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அவர்கள் வாங்கியதில் இருந்து புதிய புதிய வசதிகளை பயனாளர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் போலிச் செய்திகளை கண்டறியும் புதிய வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுவிட்டர் செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் முதல் திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை போலியான செய்திகள் பரவி வருகின்றது.

இதை தடுக்க  ‘நோட்ஸ் ஆன் மீடியா’ எனும் புதிய வசதியை ஏற்படுத்தும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அதன்படி டுவிட்டரில் பதிவிடப்படும் புகைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள், அந்த படத்தை கொண்ட தற்போதைய மற்றும் எதிர்கால டுவீட்களில் காண்பிக்கப்படும்.

அதற்கு ஏற்ப டுவிட்டரில் பதிவேற்றப்படும் புகைப்படங்களுக்கு ஏற்ப ‘அபவுட் தி இமேஜ்’  எனும் வசதியும் இடம்பெறும். இந்த அபவுட் தி இமேஜ் வசதியை தேர்வு செய்தால் பயனர்கள் போலியான செய்திகளை கண்டறிய முடியும். தற்போது இந்த வசதி ஒரே ஒரு புகைப்படம் உள்ள பதிவுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.