வாட்ஸ்அப் செயலியானது தங்களது பயனர்களுக்கு ஏற்றவாறு புதிய பல அம்சங்களை ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய பதிப்பில் வணிக கணக்குகளை பயன்படுத்துவோரின் பயனர்களுக்கு ஆன்லைனில் அவர்கள் எந்த நிலையில் உள்ளனர், ஆன்லைனில் உள்ளனரா? கடைசியில் எப்பொழுது அந்த செயலிக்கு வந்தனர்? என்பது குறித்து எந்தவித தகவலும் காட்டுவது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் ஒரு அமைய வரவேற்பைப் பெற்றது என்றால் அது வாட்ஸ் அப் செயலி தான் இந்த செயலி தனது பயனர்களை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் தனது தரத்தை மேம்படுத்திக் கொண்டே வருகிறது புத்தம் புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது அத்தகைய அம்சங்கள் தற்போதைய காலத்தில் பயனர்களுக்கு தேவைப்படும் அளவில் உள்ளது இதன் காரணமாக இந்த செயலியை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் தளம் தனது ஒரு பகுதியான வணிக கணக்கை புதுப்பித்து அதன் மூலமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது மற்ற வணிக கணக்குகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. அப்படி வணிக கணக்குகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு இனி” online ” ” last seen ” என்ற நிலையை காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது வாட்ஸ்அப் வெப் மற்றும் iOS வணிக கணக்குகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் சொல்லியுள்ளது. அதேபோல் தொடர்ந்து ஆன்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியானது புதிய புதிய அம்சங்களையும் கொண்டு வந்துள்ளது. இப்போது அதற்கும் மீறி தங்களிடமுள்ள ஸ்டிக்கர் இன் பேக்குகளை தங்கள் நண்பர்களுக்கும் ஃபார்வர்ட் செய்யலாம் என்ற புதிய முறையை அறிவித்துள்ளது.