Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் புதிய வீடியோ!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், மாணவியின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “எப்போதும் நான் தான் முதல் மதிப்பெண் பெறுவேன். ஆனால் இந்த ஆண்டு குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை, லேட்டாகத்தான் சென்றான். அதனால் அங்குள்ள சிஸ்டர் என்னை கணக்கு பார்க்க சொல்வார்கள், இல்லை நான் படிக்க வேண்டும் என்று கூற போதும் அவர்கள் என விட மாட்டார்கள். பரவால்ல நீ எழுதி கொடுத்துட்டு உன் வேலையை பாரு என்று வற்புறுத்துவார்கள்.

என்னால் படிக்க முடியாது என்பதால் விஷம் குடித்தேன். அனைத்து வேலைகளையும் என்னை செய்ய சொல்வார்கள்.வீட்டுக்கு போக வேண்டும் என்று கேட்கும் போது, விடமாட்டார்கள். இங்கேயே இருந்து படி என்பார்கள். பொட்டு வைக்க கூடாது என்று என்னை வற்புறுத்தவில்லை என மாணவி கூறியுள்ளார்.

Exit mobile version