Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்!

#image_title

கர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்!

வரலாறை திரும்பி பார்த்தால் வைரஸ் நோய் அபாயம்… அதனால் ஏற்படும் கொடூரமான உயிரிழப்பு பற்றி புரியும்.

வைரஸ் நோய் பெரும்பாலும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவக் கூடிய ஒன்றாக உள்ளது. உதாணரத்திற்கு வெளவால், பன்றி, எலி போன்ற உயிரினங்களை சொல்லலாம்.

உலகில் இதுவரை பல கொடிய வைரஸ் நோய்கள் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. நிபா, ப்ளூ, இபோலா, ஜிகா, கொரோனா.. என கொடிய வைரஸ்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நூற்றாண்டில் மிகக் கொடிய வைரஸ் நோய் என்றால் அது கொரோனா தான். கடந்த 2019 ஆம் ஆண்டில் உருப்பெற்ற இந்த வைரஸ் உலகெங்கும் பரவி 70 லட்சம் உயிரை காவு வாங்கி சென்று விட்டது.

இந்த வைரஸ் கிட்டத்தட்ட 4000 வகைகளாக உருமாறி விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ தாக்கம் சற்று அடங்கி இருந்த நிலையில் மீண்டும் அவை ஆங்காங்கே பரவி வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

கொரோனோ தாக்கமே குறையாத நிலையில் கர்நாடகாவில் புதிதாக ஒரு வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் குரங்கில் உள்ள உண்ணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. குரங்கு காய்ச்சல் என்று சொல்லப்படும் இவை கடந்த ஜனவரி மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் பரவத் தொடங்கி இருக்கின்றது.

குரங்கு காய்ச்சல் அறிகுறி…

*கடுமையான காய்ச்சல்
*தலைவலி
*தலை பாரம்
*இருமல்
*அதிகப்படியான உடல் வலி
*சளி

கர்நாடகவில் இந்த காய்ச்சல் பரவத் தொடங்கி இருப்பதால் அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. போதுமான அளவு மருந்து பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றது.

கர்நாடகாவில் மட்டும் தென்படும் இந்த வைரஸ் அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிராவிற்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளதால்… பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த வைரஸால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் உயிரிழப்பு இதுவரை ஏற்படவில்லை என்பது தான்.

Exit mobile version