Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா வைரஸ்யை தொடந்து புதிய வைரஸ் பரவல்:? பீதியில் தமிழ்நாடு

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து மனிதர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ,தற்போது பசுமாடுகளை புதிதாக வைரஸ் நோய் தாக்க தொடங்க ஆரம்பித்துள்ளனர்.

லம்பி வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தற்போது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவ தொடங்கியது.இந்த வைரஸினால் மாடுகளின் வயிற்றுப்பகுதி மற்றும் கால்கள் பெரும் அம்மைமைகள் போல காட்சியளிக்கிறது.இந்த நோயினால் பசுமாடுகள் சரிவரஉணவு எடுக்காமையளும், தண்ணீர் சரியாக குடிக்கமாலும் உள்ளன.இதனால் பசுமாடுகள் பால் கறக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நோயால் எந்த மருந்துகளும் சரிவர தர இயலாத நிலையில் கால்நடை மருத்துவர்களும் இருக்கின்றனர்.இதுபோன்ற மாடுகள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் சிலர் சம்பாதிக்கும் நோக்கில் ரூ.500 பணம் வசூலித்து வருகின்றனர்.இந்த செயலுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை பராமரிப்பளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரமாக விளங்கிய பசு மாடுகளுக்கு ,நோய் வந்துள்ளதால் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளனர் கால்நடை பராமரிப்பாளர்கள்.

Exit mobile version