Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Best Ac 2024: சியோமியின் அசத்தல் தயாரிப்பு..! AC + Heater மாடல்..!

Best Ac 2024

#image_title

Best Ac 2024: இந்த ஆண்டு வெப்பம் அனைவரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். எனவே புதிதாக ஏசி வாங்கலாமா போன்ற எண்ணங்கள் எழுந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்த வேலையில் ஏசி வாங்கினால் கூடுதலாக மின்சார கட்டணம் உயரும் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் அதனை யோசித்து குழப்பமடைகிறார்கள். நாம் இந்த பதிவில் சியோமியின் புதிய மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி பற்றி பார்க்க உள்ளோம்.

இந்த ஏசியை Xiaomi Mijia Smart Air Conditioner A 1.5HP -யை பொறுத்த வரை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று தான் கூற வேண்டும். அதாவது இந்த சியோமியின் புதிய மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி வெயில் காலத்தில் ஏசியாகவும் அதே குளிர்க்காலத்தில் வெப்பமான காற்றை பெறவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு ஏசி மற்றும் ஹூட்டராக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏசியின் சிறப்பம்சம் (AC Model 2024 details in Tamil) என்னவென்றால் வெறும் 30 வினாடிகளில் உங்கள் அறையை இது குளிர்விக்கிறது மற்றும் 60 வினாடிகளில் உங்கள் அறையை வெப்பமடைய செய்துவிடுகிறது. இந்த Rapid cooling மற்றும் Rapid heating என்ற அம்சத்துடன் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சிலருக்கு ஏசி வாங்க யோசிப்பது என்னவென்றால் மின்சாரம் தான். மற்ற சந்தைகளில் கிடைக்கும் ஏசி போல் இல்லாமல் இது வருடத்திற்கு 361 kWh மின்சாரத்தை சேமிக்கிறது.

விவரக்குறிப்பு – Best Ac 2024

தயாரிப்பு பெயர் – Product Name MIJIA
மாடல் – Model KFR-35GW/V1A1
வேலை முறை நிலையான வேகம்
ஏர் கண்டிஷனிங் சக்தி 1.5
வேலை முறை நிலையான வேகம்
ஏர் கண்டிஷனிங் வகை சுவரில் பொருத்தப்பட்டது
ஆற்றல் திறன் மதிப்பீடு நிலை 1
உட்புற அலகு அளவு 879x212x293 மிமீ
உட்புற அலகு பேக்கிங் அளவு 950x360x295 மிமீ
வெளிப்புற அலகு அளவு 870x331x551mm
வெளிப்புற அலகு பேக்கிங் அளவு 930x390x635 மிமீ
உட்புற அலகு எடை (நிகர எடை) 10.5 கிலோ
உட்புற அலகு எடை (மொத்த எடை) 12.5 கிலோ
வெளிப்புற அலகு எடை (நிகர எடை) 30 கிலோ
வெளிப்புற அலகு எடை (மொத்த எடை) 34.5 கிலோ
வெப்ப சக்தி 1250W
குளிரூட்டும் சக்தி 760W
வெப்பமூட்டும் திறன் 5000W
குளிரூட்டும் திறன் 3500W

இந்த வகை (Vilai kuraivaana ac models in tamil) மாடல் OTA மூலம் அப்டேட் செய்யக்கூடிய எதிர்கால சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஏசி தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக எலக்ரானிக் சாதனங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த AC + Heater மாடல்-ஐ அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த (Xiaomi Mijia Smart Air Conditioner A 1.5HP Price) இந்திய மதிப்பில் சுமார் ரூ.27,654 இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version