வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக வரக்கூடிய மாணவர்களுக்கு 2 சிறப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது இந்திய அரசு.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்த 2 சிறப்பு வகை விசாக்கள் :-
✓ இ-ஸ்டூடண்ட் விசா
✓ இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்
இவை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு படிக்காதவன் மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட புதிய விசா முறைகள் ஆகும். இதன் முதலில் உள்ள இ-ஸ்டூடண்ட் விசா வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது எனவே இரண்டாவதாக உள்ள இ-ஸ்டூடண்ட்-எக்ஸ் என்ற விசா அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு படிக்க வரும் மாணவர்களின் குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்டது என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
சிறப்பு விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் முறை :-
இந்த சிறப்பு விசாக்களை மாணவர்கள் தனித்தனியாக பெறுவதற்காக https://indianvisaonline.gov.in/ என்ற இணையதளத்தை இந்திய அரசு உருவாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த விண்ணப்பத்தினுடைய நம்பகத்தன்மையை ஸ்டடி இன் இந்தியா’ (எஸ்ஐஐ) ஐடி மூலம் சரி பார்க்கும் படியும் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஸ்டடி இன் இந்தியா இணையதளத்தை பயன்படுத்தி வருபவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் தங்கி படிப்பதற்கான உரிமைகள் வழங்கப்படும் என்றும் எஸ் ஐ ஐ டி இல்லாதவர்களுக்கு இந்தியாவில் தங்க மற்றும் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.