Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தற்கொலை

Representative image

கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுமணப் பெண் ஒருவர் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரத்தைச் சேர்ந்த தனுஜா, பெயின்டரான சாமுவேல் (21) என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, இருவரும் பொழிச்சலூரில் உள்ள வேதாச்சலம் நகரில் வசித்து வந்தனர்.
கடந்த புதன்கிழமை, தனது பிறந்தநாளில், தன்னை வெளியே அழைத்துச் செல்லுமாறு தனுஜா சாமுவேலிடம் கேட்டுள்ளார். சாமுவேல் பணம் இல்லாத காரணத்தினால் தனுஜாவை வெளியே அழைத்து செல்ல முடியவில்லை, இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவு வீடு திரும்பும் போது மது அருந்திவிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தனுஜா மேலும் ஆத்திரமடைந்துள்ளார். இந்நிலையில் சாமுவேல் அவரது அம்மாவை அழைத்து வர வெளியே சென்றுள்ளார். இருவரும் வீடு வரும் போது தனுஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு தனுஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

Exit mobile version