Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராகுல் காந்தி வெளியிட்ட செய்தி! விவசாயிகளுக்கு விரைவில் விடிவுகாலம்

news-released-rahul-gandhi-early-break-for-a-farmers

news-released-rahul-gandhi-early-break-for-a-farmers

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் நீக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தந்து. கடந்த ஆண்டு, நவம்பர் 26ம் தேதி தலைநகராகிய டெல்லியில் இந்திய விவசாயி மக்கள் போராட்டத்தை மழை, வெயில், குளிர் பாராமல் போராட்டம் நடத்தினர்.

மேலும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ,ஹரியானா,உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி மக்கள் மிகத் தீவிரமாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

மேலும், காசிப்பூர் பகுதியில் விவசாயி மக்கள் தொடர் போராட்டம் இதுவரை சுமார் 10 மாதங்களாக நடந்து வருகின்றது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தலைநகருக்குள் நுழையாமல் இருக்க முள்கம்பி, கான்கிரீட் சுவர்கள் கொண்டு டெல்லி எல்லையில் தடுப்புகளை காவல் அதிகாரிகள் அமைத்து உள்ளனர்.

அந்த தடுப்புகள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டன. இதையடுத்து டெல்லி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் செல்ல உள்ளதாகவும், விவசாய பொருட்களை அங்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் அகற்றப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான தடுப்புகளே தற்போது அகற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வேளாண் சட்டங்களும் நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்களும் தடுப்புகள் அகற்றப்பட்டது போல, புது வேளாண் சட்டங்களும் நீக்கப்படும் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

Exit mobile version