Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்..

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்..

அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நெல்லையில் தமிழ் செய்தி வாசிப்பு பிரிவில் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி தனது கம்பீரமான குரல் மற்றும் உச்சரிப்புக்காக ஏராளமான நேயர்களை பெற்றவர். அவரது குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

செய்தி என்றால் முதலில் ஞாபகம் வருவது சரோஜ் நாராயணசாமி. அவர் செய்தி வாசிக்கும் போது துல்லியமாக அழுத்தமாகவும் எளிதில் புரியும் வகையிலும் வாசிப்பார். இந்நிலையில் மும்பையில் வசித்து வந்த அவர் திடீரென காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய வானொலியில் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமிக்கு தமிழக அரசு  கலை மாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது. அவர் மறைந்தாலும் அவர் குரல் நாடெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

Exit mobile version