விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அதிரடி!! இனி இந்த மாவட்டங்களிலும் பாடசாலை!!
தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமா துறையில் மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மே மாதம் நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு உடன் இணைத்து நடித்து முடித்து விட்டு அடுத்த 3 ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஓய்வேடுக்கவுள்ளதாக தகவல் வந்தது. மேலும் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்துவர் என்று தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
அதனை தொடர்ந்து சில நாட்கள் முன் அவர் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் பனையூர் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தொகுதிவாரியாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்தது.
அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பின்னர் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை கருத்தியில் கொண்டு இரவு நேர பாடசாலை தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனையடுத்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் முதற்கட்டமாக இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கினர்.
இதனை தொடர்ந்து தற்போது இரவு பாடசாலை திட்டத்தை கோவை மாவட்ட இளைஞரணி சார்பாக பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ளது. இதன் மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் எதிர்காலம் சிறந்து விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து திட்டத்திற்க்கான அனைத்து செலவும் விஜய் மக்கள் இயக்கம் பார்த்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளர்கள்.