Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்? உச்சகட்ட பரபரப்பு!

கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்? உச்சகட்ட பரபரப்பு!

கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 23) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆட்சியைத் தக்கவைக்க 105 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 99 வாக்குகளை மட்டுமே பெற்று காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் வழங்கினார். அடுத்த அரசு பதவியேற்கும் வரை முதலமைச்சராக தொடரும்படி குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று காலையில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இல்லத்திற்கு வெளியே தொண்டர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தற்போதைய நிலையில் பெங்களூருவுக்கு வர வாய்ப்பில்லை என தெரிகிறது. ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான ஜேடிஎஸ் எம்.எல்.ஏ விஸ்வநாதன் பிடிஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “உடனடியாக பெங்களூரு திரும்ப எந்தத் திட்டமுமில்லை. எங்களுக்குக் கூடுதல் நேரம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஆட்சி கோர பாஜக திட்டமிட்டுள்ள நிலையில் இன்று பாஜக சட்டமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. நாளை ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரும் என்கின்றனர் கர்நாடக பாஜக வட்டாரத்தில். ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் குழுக் கூட்டமும் பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ளது.

மேலும், அடுத்த முதல்வராக எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தாலும் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், “எங்கள் கட்சி சார்பில் எடியூரப்பா தலைவராக இருந்தாலும், அவர் தனக்கான ஆதரவை நிரூபிக்க வேண்டும். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், எடியூரப்பா தனது ஆதரவாளர்களையும், விசுவாசிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க : பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version