Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்!

Next movie after Love Today! Pradeep Ranganathan pairs up with two heroines!

Next movie after Love Today! Pradeep Ranganathan pairs up with two heroines!

லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்!

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்தார். இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தனது அடுத்த படமான லவ் டுடே படத்தில் களம் இறங்கினார். இந்த படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமாக  அறிமுகமாகினார். இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ,ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் இவனா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து, ப்ரோடுக்ஷன் பணிகள் நடந்து வந்தது. அப்போது பிரதீப் ரங்கநாதன் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு லவ் டுடே படத்தின் டப்பிங் முடிந்து விட்டதாக அறிவித்தார்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் காதலர்கள் இருவர் செல்போனை மாற்றிக்கொண்டு அதனால் ஏற்படும் சிக்கல்களை ரசிகர்களுக்கு காமெடியாக இந்த படத்தில் காட்டியுள்ளார். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கதானத்துக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். அதிதி சங்கருக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். என   தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மிதுன் எனும் அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மிதுன் ஏ.ஆர் முருகதாஸின் உதவி இயக்குனர் ஆவார்.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் சென்சேஷன் கதாநாயகிகளாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் பிரியங்கா மோகன் இருவருடன் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் லவ் டுடே போல பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version