Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!!

Next movie before release!! NELSON'S TARGET!!

Next movie before release!! NELSON'S TARGET!!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!!

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இதற்கு முன்பாக தனியார் டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ மற்றும் விருது வழங்கும் நிகழ்சிகள் போன்றவற்றை இயக்கி கொண்டு இருந்தார்.

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதற்கு அடுத்ததாக விஜயின் பீஸ்ட் படமும், ரஜினியின் ஜெயிலர் படமும் இவரை தேடி வந்தது. ஆனால் விஜய் வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ஜெயிலர் படமும் கை விட்டு போய் விடும் என்ற நிலையில், ரஜினி சொன்ன வாக்கை காப்பற்றுவார் என்பதற்கிணங்க ஜெயிலர் படம் இவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படம் நெல்சனுக்கு மிக முக்கியமான படம் என்பதால், ஒவ்வொரு விசயத்தையும் கவனித்து இயக்கி வருகிறார்.

இந்த படம் நெல்சனுக்கு ஒரு கம்பேக் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகிறது. ஆனால் நெல்சன் இப்போதே தனுஷை சந்தித்து கதை ஒன்றை சொல்லி இருக்கிறார். நெல்சன் சொன்ன கதை தனுசுக்கும்  பிடித்து அவர் உடனே ஒத்துக்கொண்டுள்ளார்.

மேலும் நடிகர் கமலை வைத்தும் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சன் உள்ளார். அதற்கு முதலில் தனுசை வைத்து இயக்கும் படத்தை, கமலை வைத்து தயாரித்து விட்டு, பிறகு கமலை வைத்து படம் இயக்கலாம் என்ற திட்டத்தில் நெல்சன் இருக்கிறார்.

Exit mobile version