சமீபத்தில் துபாயில் நடைபெறவிருந்த சர்வதேச கண்காட்சியில் தமிழகம் சார்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை தொடங்கி வைப்பதற்காக துபாய் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அங்கே பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
மேலும் அவருடன் பல முக்கிய அமைச்சர்கள் உட்பட பலரும் சென்றிருந்தார்கள் கடைசி நேரத்தில் முதல்வருடன் செல்ல வேண்டிய துரைமுருகன் பயணம் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
அதோடு துபாய் சென்ற முதலமைச்சர் அங்கே பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல உலக முதலீடுகளை ஈர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து துபாயில் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். துபாய் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட நிலையில் மாநில உரிமைகளுக்காக அடுத்த பயணம் டெல்லியை நோக்கி தொடர்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியிருக்கின்ற கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நாளை நான் சந்திக்கிறேன்.
தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மத்திய அரசு கொடுக்க வேண்டிய வரி வருவாய் நிவாரணத்தொகை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், உள்ளிட்டோரின் சந்திக்கிறேன். தேசிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசயிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் தலைநகர் டெல்லியில் திராவிட கோட்டையாக உருவாகியிருக்கின்ற அண்ணா, கலைஞர், அறிவாலயம் ஏப்ரல் மாதம் 2ம் தேதி திறக்கப்படுகிறது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டது என தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பலரும் திமுகவின் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.