Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பனிச்சோலையாக மாறியுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி! வியப்பில் சுற்றுலா பயணிகள்!





கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மத்தியில் இயற்கையாகவே அமைந்துள்ளது “நயாகரா நீர்வீழ்ச்சி”. இந்த நீர்வீழ்ச்சி உலகத்தின் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 

ஆண்டுதோறும் இந்த நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பர். இந்த நீர்வீழ்ச்சியானது கனடாவில் இருக்கும் நயாகரா நதியின் நடுவில் பாய்ந்தும் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் மாகாணத்திற்கு சென்று விழுகின்ற நீர்வீழ்ச்சியாகும். 

தற்போது நயாகரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ஒன்டாரியோ பகுதியிலும் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் பகுதியிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இவ்வாறான கடும் குளிர் காரணத்தினால் நயகரா நீர்வீழ்ச்சியில் ஓடுகின்ற தண்ணீர், பனிக்கட்டிகளாக உறைந்து ஒரு பனிச்சோலையாய் காட்சியளிக்கிறது. 

தற்போது அங்கு நிலவும் கடும் குளிரிலும் இந்த அழகான காட்சியை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருகின்ற சுற்றுலா மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த அழகிய காட்சியைக் கண்டு மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version