தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்!

0
253
Night curfew in Tamil Nadu? People in peak corona panic!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்!

உலக நாடுகள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் பரவி வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. கொரோனா  பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

அதில்  முக கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும். கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் கொரோனா பரவல் குறைந்தது. அதனால் மக்கள் அவர் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.

மேலும்  கடந்த டிசம்பர் மாதங்களில் சீனாவில் மீண்டும் எழுச்சி பெற்ற கொரோனா பரவத் தொடங்கியது. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு பணி படுத்தப்பட்டது. மேலும் கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதனால் கொரோன தடுப்பு வழிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று புதிய உச்சம் பெற்றுள்ளது. சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா கண்டறியப்பட்டதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு பொதுமக்கள் பொதுவெளியில் கட்டாயம் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் கொரோனா உயர்ந்தால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.